Thursday, September 8, 2016

பரதேசி ராஜாவின் இளவரசிகளும் கறிக்குழம்பும் - சிறுகதை



 “இன்னைக்கும் களியும் கீரகொழம்பும் தானா...? சிணுங்கியவளுக்கு உடனடியாக தலைமேல் பலன் கிடைத்தது,

அம்மா இத்தனை வலுவாக தலையில் அடிப்பாள் என்று அந்த குழந்தை எதிர்பார்க்கவில்லை பாவம், வீட்டின் மூத்த பிள்ளை தலையில் அடி வாங்கியதும் மற்ற பிள்ளைகள் பேசாமல் பிசுபிசுப்பாய் தட்டில் கருத்து உருண்டிருந்த களியை. உப்பும் காரமும் குறைச்சலான புளியங்காய் புளிப்புடன் ஒரு மார்கமாக கீரைக் குழம்பு என்று பெயர் எடுத்த பச்சை திரவத்தில் தொட்டு விழுங்கிக் கொண்டிருந்தன,

“நான் நாலு மகாராணிங்கள பெத்து போட்டிருக்கேன், தினத்துக்கும் சுடச்சுட சோறும் பருப்புக் கொழம்பும் வச்சி தரேன், பொரியல்கூட ரெண்டு வகையா செஞ்சி வச்சிடறேன், சாப்டுட்டு போய் தாயம் வெளையாடிட்டு இருங்க போங்க,

நான்கும் பெண் பிள்ளைகளாக பிறந்துவிட்டது, அந்த குடிகாரன் ஒவ்வொரு சாமியாக வேண்டிக்கொண்டு “இந்த முறை ஆம்பள புள்ளைதான் பாத்துக்கடி...
என்று பார்க்கச் சொல்லி பிறந்த நான்குமே பொட்டைங்க, திரும்ப எந்த சாமிய வேண்டிக்கிட்டு அடுத்த பிள்ளைய பெத்துக்க சொல்லுவானோ தெரியல,