Showing posts with label அக்கப்போர். Show all posts
Showing posts with label அக்கப்போர். Show all posts

Tuesday, June 8, 2021

தலைகீழ் மனிதர்கள். - அக்கப்போர்


தலைகீழ் மனிதர்கள்.
--------------------------------
ஆயிரம் பேரிடம் விசாரித்தால்
அதில் ஒருவர்தான்
இலக்கியப் புத்தகத்தை கட்டிக் கொண்டு அழுவதாக சொல்வார். அந்த ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் வாழ்க்கையை கட்டிக்கொண்டு மாறடிக்கிறார்கள்.

எல்லோருக்கும் வயிறு இருக்கிறது.
வயிற்றை கவிதை கொண்டு நிரப்ப முடியாது.
காசு கொண்டுதான் நிரப்ப முடியும்.
பணம் என்கிற வேதாளம் எல்லா மனிதர்களையும் தலைகீழாக மாற்றி வௌவாலாக தொங்கவிட்டிருக்கிறது.

நானும் ஒரு வௌவாலாக மாறிய பிறகு
என்னை நான் மாற்றிக்கொண்டேன்.
அப்போதிலிருந்து நான்
தலைகீழாக எழுதத் துவங்கினேன்.
சில மனிதர்களும்
நிறைய வௌவால்களும்
அந்த எழுத்தை
படித்து புரிந்து கொண்டு
ரசிக்கின்றன.
---------------------
08.06.2021

Wednesday, June 3, 2020

வணக்கம் நண்பர்களே...


3-Jun-20
வணக்கம் நண்பர்களே...
என்னைப் பற்றி என்னை நானே வியந்து சொல்ல ஒரு தகவல் சொல்கிறேன்... 

நான் சற்று ஏறக்குறைய 2010 ஜனவரியில் இருந்து பிரபல பதிவர்... பிளாக்கின் வழியாக... இரண்டாயிரத்து பத்து முதல் இப்போது 2020 வரையில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக பதிவில் பகடையாடுகிறேன்.. இதுவரை நான் எழுதிய பதிவுகள் மொத்தம் நாற்பத்தி எட்டு அதில் சொத்தை சொல்லைகள் போக மிச்சம் இருப்பது எத்தனையாயிரம் கோடிகள் என்று தெரியவில்லை. மொத்தமாக ஆறு ஆயிரத்து நானூத்து இருபது பதிவுகளை யாரோ படித்திருக்கிறார்கள். ஐரோப்பாவில் ஆரம்பித்து அண்டார்டிக்கா வரையில் பல பேர் எட்டிப் பார்த்திருக்கிறார்கள். அதிகமில்லை மொத்தம் 48 பதிவுகள் சில நூறு பேர் கண்டு இத்தனை பெரிய சாதனை நடந்திருக்கிறது. யோசிக்கவே ஆச்சரியமாக நம்பமுடியாத அளவுக்கு இருக்கிறது. இத்தனை பெரிய சாதனையை மீண்டும் என்னால் முறியடிக்க முடியுமா என்று கூட தெரியவில்லை. இன்றைக்கு 3.6.2020 வரைக்குமான என் கணக்கு வழக்கை உங்களிடம் சொன்னால் அதன் பயங்கரம் உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இத்தனை பலகாலத்திற்கு பிறகு என்னுடைய பாலோயர் என்றால் மொத்தம் 4 பேர். அதில் நானே இரண்டு ஆளாக இருக்கவும் வாய்ப்புண்டு. அது எப்படி பட்ட பெரிய பட்டியல் என்பதை சொன்னால் அதன் வீரியம் புரியும். அதிகம் இல்லை நண்பர்களே... இன்றைய என்னில் நான் கண்ட பேஜ் கணக்கை நீங்களே படித்துப் பாருங்கள்... அச்சமில்லாமல்... இதுதான் இன்றைய கணக்கு...

ஆனால் நண்பர்களே... எனக்கு நம்பிக்கை இருக்கிறது. எழுதும் மனிதனிருக்கு மட்டும் எழுதும் ஆர்வமிருக்கும். வரைக்கும் புதிய அத்தியாயத்தோடு. தொடங்குவோம் நண்பர்களே...
(இப்படி ஒரு அதிர்ச்சி தொடக்கத்திற்கான ஆரம்பத்திற்கு ஒரு காரணமிருக்கிறது. அதையும் நேரம் வரும்போது சொல்வேன்) தொடர்ந்து எழுதுவோம் நண்பர்களே...
மறந்து போன அந்த நான்கு பாலோயர்ஸ் தங்களை மறந்து போகாமல் இருப்பதற்காக சிறு குறிப்பு... என் பெயர் வரதராஜன். புனைவில் எழில்வரதன் என்றும் சொல்வார்கள். அவர்களையும் இனி என் மீது நம்பிக்கை கொண்ட நாலான நாலுகோடியே நான்கு கோடி ஆட்களுக்கும் தொடர்ந்து ஆர்வம் கொண்டு எழுத முயற்சிக்கிறேன். தொடர்ந்து பயணிப்போம். வணக்கம் நண்பர்களே...

எழுத்து வடிவம் நான்.
எழுதியது எனது மனைவி விஜயலட்சுமி.


Saturday, November 30, 2019

கூர்மையான பற்கள். - ஆபத்தும் பராமரிப்பும்.



முன்பே சொல்லிவிடுகிறேன். இது நிச்சயமாக  பற்கள் பற்றிய மருத்துவக் குறிப்பு அல்ல. என்னிடம் கொஞ்சம் உப்பு மற்றும் கோபால் பல்பொடி மட்டுமே இருக்கிறது. பற்களை பராமரிக்க அவை போதுமானதல்ல. கூர்மையான பற்களால் அவதிப்படுகிறவர்கள் நல்லதொரு பல் மருத்துவரை அனுகுவதே நல்லது. 

            பற்களோடு தொடர்பில்லை என்றால் இந்தத் தலைப்பு எதற்காக?

Saturday, November 2, 2019

வியாழன் மறுவீடு புகுதல் – சில பரிகார விளக்கங்கள்.


வெளியே காக்-காவென்று ஒரே சத்தம். இன்னும் பொழுது விடியவில்லை. ஜன்னல் வழியாகத் தெரிந்த வானம் ஒரே புகைமூட்டமாக இருக்கிறது. அந்தக்காலத்தில் ஒரு பழக்கம் உண்டு. தூங்கி எழுந்ததும் முதல் காரியமாக தன்முகத்தைத் தானே பார்த்துக்கொள்வார்கள். சிறிய கண்ணாடியில்.. அன்றைய நாளை இனிய நாளாகத் துவங்குகிறார்களாம். தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம் போல இதுவும் தொட்டுத் தொடரும் பாரம்பரியமானதொரு மூட நம்பிக்கைதான். கண்ணாடியில் தெரிவது கடவுள் இல்லை. அது ஒரு மனித முகம். தூங்கி வழிகிற அசட்டு முகம். அதில் நல்லதும் கெட்டதும் எழுதப்பட்டிருக்காது. வாயைப் பிளந்துகொண்டு எச்சில் வழிய தூங்கும் சிலருக்கு கடைவாய் ஓரத்தில் யானைத் தந்தம் அளவுக்கு வெள்ளைக் கோடுகள் வேண்டுமானால் முளைத்திருக்கலாம். அந்த முகத்தில் வேறு எந்த அதிசயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் முகத்தைப் பார்த்துக்கொள்வார்கள்.

Thursday, October 31, 2019

# மழைக்காலத்தில் முளைக்கும் குடைக்காளான் #

     ·         நல்லிரவு நேரம். மழை தொரத்தொரவென பெய்துவிட்டு சற்றுமுன்தான் ஓய்ந்திருக்கிறது. இப்போதே குளிர்காலம் வருவதன் ஆயத்தம் தெரிகிறது. ஈரம்சாரமான இந்த இரவில் அமானுஷ்யங்கள் குறித்து எழுதலாமா என்று யோசிக்கிறேன்.
·         பேய்க் கதைகளா? நல்லிரவிலா?

Sunday, October 27, 2019

# நல்ல கவிதைகளை எப்படி அணுக வேண்டும்? #



பலபேர் ஊரவைத்து துவைத்துக் காயப்போட்ட துணிகளை மீண்டும் துவைத்துக் கிழிப்பதில் உடன்பாடில்லைதான். நான்கு வரிக் கவிதைகளை படித்துவிட்டு, சுமாராக புன்னகைத்து, அடுத்த பக்கத்திற்கு தவ்வுகிற போது மீண்டும் மீண்டும் அதே கவிஞர் அதே கவிதைகளை அதே பெயரில் எழுதி இன்புறுத்தியதால் சில வார்த்தைகள் மட்டும் சொல்லத் தோன்றியது..

Monday, October 7, 2019

சொல்லிசைப் பிரதிகள் - இதெல்லாம் ஒட்டகமா?


இது நியாயமில்லைதான். வாசிப்பவர்களின் நேரத்தோடும், ரசனையோடும் விளையாடக் கூடாதுதான். மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதிவிட்டு, “இனி இது படிப்பவன் பாடு” என்று வீட்டுக் குப்பையை வீதியில் இறைக்கிற மனோபாவம் தவறான ஒன்றுதான். அந்தத் தவறு தொடர்ந்து உலகமெங்கும் நடந்தபடிதான் இருக்கிறது.. பாவம் வாசக நெஞ்சங்கள்.