படுத்து புரளும் போது உடல்வலி
அதிகமாக தெரிந்தது. கால் கெண்டைச் சதைகள், குதிகால்கள் நெருக்கிப் பிடித்தாற்ப்போல்
வலித்தது. இரவு ஒன்பது மணிக்கெல்லாம் கடை மூடிவிட்டாலும் மறுநாளுக்காக மாவு அரைத்து
காய் நறுக்கிவைத்து தயார் செய்ய வேண்டியிருக்கிறது. டேபிள், சேர்களை துடைத்து ஒதுக்கி
வைக்க வேண்டியிருக்கிறது. ஓட்டல் கடை நடத்துவது மல்யுத்தம் செய்வதைவிட அதிக வலிதரும்
விசயமாக இருந்தது அவனுக்கு.
அவன் பரவாயில்லை. அவன் மனைவி இன்னும் பாத்திரங்களை வரட், வரட் என்று தேய்த்துக் கொண்டிருக்கிறாள். விரல் ரேகைகள் பாதி தேய்ந்து போயிற்று - மீதி தேய்ந்து கொண்டிருக்கிறது. அவள் படுக்க பதினொன்று கூட ஆகலாம். இறக்கமுடியாத பாரம். அவன் சலித்துக் கொள்வான்.
பாத்திரங்களை தேய்த்து கவிழ்த்து வைத்து தூங்க வந்தாள்.
வழக்கமாக அவள் வரும்போது தூங்கியிருப்பான். இன்றைக்கு விழித்தபடி இருந்தான். விழித்தபடி
என்றால் அரைக்கண் செருகி அரைக்கனா கண்டபடி இருந்தான் கால்வலி கொஞ்சம் கூடுதலாக தெரிந்தது.
முகத்தை கழுவி துடைத்தபடி வந்தவள் பக்கத்தில் தூங்கிய பையனின் போர்வையை சரிசெய்துவிட்டு ஓய்ந்து உஸ்சென்று உட்கார்ந்தாள்.
“இன்னும் தூங்கலையா நீங்க..?”
அவன் பரவாயில்லை. அவன் மனைவி இன்னும் பாத்திரங்களை வரட், வரட் என்று தேய்த்துக் கொண்டிருக்கிறாள். விரல் ரேகைகள் பாதி தேய்ந்து போயிற்று - மீதி தேய்ந்து கொண்டிருக்கிறது. அவள் படுக்க பதினொன்று கூட ஆகலாம். இறக்கமுடியாத பாரம். அவன் சலித்துக் கொள்வான்.

முகத்தை கழுவி துடைத்தபடி வந்தவள் பக்கத்தில் தூங்கிய பையனின் போர்வையை சரிசெய்துவிட்டு ஓய்ந்து உஸ்சென்று உட்கார்ந்தாள்.
“இன்னும் தூங்கலையா நீங்க..?”
“தூக்கம் வரலை... குதிகால் வலி அதிகமா தெரியுது”
தைல பாட்டில் தேடி எடுத்துவரப் போனாள். கால்வலி என்றால் தைலம் பூசுகிறாள். தலைவலி, உடல்வலி எல்லாவற்றிற்கும் தன் பாத்திரம் தேய்த்து, காய் அறுத்து, சமைத்து, சப்ளைசெய்து ஓய்ந்துபோன குச்சு விரல்களால் நிவாரணம் தருகிறாள். ஒருநாள்கூட இவனிடம் கால் வலிப்பதாகவோ பாதம் நோவதாகவோ சொன்னதில்லை. குதிகால் பித்தவெடிப்பில் ரத்தம் வரும் போது நொண்டி நடந்தாலும் அப்படித்தான் சொல்ல மாட்டாள். சொல்லி என்ன ஆகப்போகிறது. அவரவர் வலியை அவரவர்தானே தாங்க வேண்டும்.
“எங்க... இங்கயா?” தைலம் பூசுகிறாள்.