Thursday, May 16, 2019

ஒரு சொல் - வெற்றியை கொண்டாடாதீர்கள்


எல்லோருமே வெற்றியை விரும்புகிறார்கள். வெற்றியை
 கொண்டாடுகிறார்கள். எல்லாவற்றிலும் எப்பொழுதும் வெற்றி பெறவே விரும்புகிறார்கள். ஆனால், வெற்றி என்பது எதிராளி மீது தோடுக்கப் படுகிற மோசமான வன்முறை. சமூகத்தின் அங்கமாக இருக்கும் ஒருவன், தான் மட்டும்
வெற்றிகரமான மனிதனாக இருக்க வேண்டும் என்று நினைப்பது மனநோய். உங்களுக்கு நெப்போலியனை பிடிக்குமா? ஹிட்லரை கொண்டாடுகிறீர்களா?
செங்கிஸ்கானின் சரித்திரம் உங்களுக்கு உத்வேகம் தருகிறதா? வாழ்வில் அவர்களைப் போலவே போரிட்டு வெல்லத் தோன்றுகிறதா..? அப்படியென்றால் நீங்கள் நோய்க்கு இரையாகிவிட்டீர்கள். தனது வெற்றியை கொண்டாடுகிற மனிதன், சகோதரத்துவம் சமத்துவம் பற்றி பேசுகிற தகுதியை இழந்துவிடுகிறான். வெற்றி என்பது அதிகார மனோபாவம். அது ஒரு ராஜ நோய். சக மனிதர்களை கீழ்மைக்குத் தள்ளி அது தன்னை முன்னிறுத்திக் கொள்ளும்.
 ஆகவே வெற்றியை கொண்டாடாதீர்கள். கடந்து செல்லுங்கள்.
- புத்தன் கோபித்துக் கொள்வான்.


No comments: