Saturday, May 25, 2019

ஒற்றை மிகுதியானவன்



இந்த வாழ்க்கை மீது எனக்குள்ள விமர்சனங்களை என் கதைகளில் எழுதுகிறேன். என்னைச் சுற்றி இருக்கிற நிஜ மனிதர்களும், எனது உள்ளத்தில் உருவாக்கிய கற்பனை மனிதர்களும் சந்திக்கும் புள்ளியே எனது கதையின் பேசும் பொருள்.



இயற்கை தொடர்ந்து ஏதாவது ஒன்றை புதிதாக உருவாக்கிய படி இருக்கிறது. புற உலகம் நொடிக்கு நொடி மாறியபடி இருக்கிறது. கவனிக்கத் தவறினாலும் காலம் நம்மை, ஆற்றின் போக்கில் உந்தித் தள்ளுவதை தவிற்க இயலாது. பல முகம் கொண்ட மனிதர்கள், யூகிக்க முடியாத நடத்தைகள், சமூக மாற்றங்கள், பொருள் தேடும் நிர்பந்தம்... இவைகளுக்கு நடுவே, அதன் போக்கிலேயே ஈடு கொடுத்து, வாழ்வோடு நம்மை பொருத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 
நெகிழ்வுத் தன்மையும், முன் உணரும் நுண் அறிவும் கொண்டவர்கள் சவால்களை சமாளிக்கிறார்கள். அந்த நுண் உணர்வே உயிரினத்தின் குழந்தைப் பாடம். அதற்கான கச்சாப் பொருட்களை, நவீன வாழ்வின் இடுக்குகளில் இருந்து தேடிப் பிடித்து தோண்டித் தருவதே எழுத்தின் வேலை. அதை ஏற்பதும் இகழ்வதும் வாசக சுதந்திரம்.
விகடனில் தொடர் சிறுகதைகளாக வந்து, பிறகு, 'மனம் மயங்கும் சிறுகதைகள்' தொகுப்பின் மூலம் பரவலான வாசகர்களின் பாராட்டைப் பெற்ற இருபது சிறுகதைகளின்
முதல் பத்து கதைகள் இப்போது மின் புத்தக வடிவில். பக்கச் சிக்கனத்தை மனதில் கொண்டு அடுத்த பத்து கதைகள் வேறுF தொகுப்பாக வெளியிட உத்தேசம். உண்பது உடலுக்கும், படிப்பது மனதுக்கும் நல்லது. படித்துப் பாருங்கள்.. உங்களுக்கும் பிடித்துப் போகும். நன்றி!

No comments: