Sunday, July 28, 2019

பெரிய கறுப்பன் பெரிய கறுப்பனாகவே இருப்பது.


சமையற்கலையில், பலகாரங்கள் சுடுகிறபோது, முதலில் எண்ணெய் சூடேறிவிட்டதா என்பதை அறிந்துகொள்ள ஒரு துளி மாவை விட்டு சொதித்துப் பார்ப்பது போல, எழுத வருகிறதா என்பதை அறிந்து கொள்ள எல்லோருமே முதலில் கவிதையை முயற்சிக்கிறார்கள். நன்றாக வெந்து பொன்னிறமாக மேலே மிதந்தால் அது பக்குவமான கவிதை. தீவிரமாக யோசித்து,
ஆறு பழைய வார்த்தைகள், எட்டு புதிய வார்த்தைகளைக் கொண்டு, அடுக்கு மாடி குடியிருப்பு போல சொற்களை முடிந்தவரை கீழே விழாதபடி நேர்த்தியாக அடுக்கி வைத்தால் அதை கவிதை என்பார்கள். நான் புதிதாக ஒன்றை முயற்சித்திருக்கிறேன். சிரமம் பார்க்காமல், மனதை கல்லாக்கிக்கொண்டு இறுதிவரை படித்துப் பாருங்கள். ஒருவெளை அது கவிதையாகவும் இருக்கலாம். சிலருக்கு அது புரிந்தாலும் புரியலாம்.


பெரிய கறுப்பன் பெரிய கறுப்பனாகவே இருப்பது.

பெரிய கறுப்பு, பெரிய கறுப்பக இருக்கலாம், ஆனால் பெரிய கறுப்பாக இருக்க கூடாது' என்றவர்கள் பெரிய கறுப்பை நீயென்ன பெரிய கறுப்பாவென்று நையாண்டி செய்தபோதும் பெரிய கறுப்பாக இருப்பது பெரிய கறுப்புக்கே தெரியாது. பெரிய கறுப்பாக இருப்பது அப்படியொன்றும் சாதாரணமில்லை. பெரிய கறுப்பாக இருந்தால் மட்டுமே பெரிய கறுப்பனாக இருக்க முடியும். எவர் எப்படி விமர்சித்தாலும் பெரிய கறுப்பனாய் இருப்பது பெரிய கறுப்பால் மட்டுமே முடியுமென்பதால் பெரிய கறுப்பால் மட்டுமே எப்போதும் பெரிய கறுப்பனாய் இருக்க முடிகிறது.


- பெரிய கறுப்பன் சார்பாக, சின்ன கறுப்பன்.


No comments: