Friday, October 4, 2019

கொசு விரட்டி

தண்டமுத்து

மிடுக்காக உடுத்துவான்
அழகாய்ப் பேசுவான்
நாகரீகம் எதுவென்று
நயம்பட உரைப்பான்
இன்முகம் காட்டுவான்

நுரைத்த சோடாவை
கேட்டு வாங்கிப் பருகுவான்
மேடையில் முழங்கிவிட்டு
கீழே வந்து குடிப்பான்
புகை விடுவான்
சிலநேரம் பீடா தின்பான்
குமட்டலை அடக்கி
இருமலுடன் தும்மலிட்டு
கண்ட இடத்தில் துப்புவானே
மூச்சு முட்ட
உபதேசம் செய்கிற
மூதேவி முண்டம்.

கோணல்முகன்


முகம் சகிக்கவில்லையா
கண்ணாடியை  மாற்று
அல்லது முகம் பார்க்காதே.


No comments: