மின்சாரம் வந்த நாள் பற்றியோ, கிணறு வெட்டித் தந்த ஈஸ்வரன் பற்றியோ முற்றும் முழுசுமாக தெரியாதது போலவே நெலிகத்தின் முதல் தையல்காரன் யார் என்ற விசயமும் நெலிகத்தாருக்கு தெரியவில்லை. மரப்பட்டைகளை உடுத்திய பின், நெய்யப்பட்ட உடைகளை உடுத்த ஆரம்பித்த வித்தை அங்கு யார் கொண்டு வந்தார்கள் என்றும் தெரியவில்லை. ஆனால், உத்தாண்டி என்ற தையல்காரனைப் பற்றியும் உத்தாண்டியின் அம்மாவைப் பற்றியும் நெலிகத்தில் சிலபேருக்கு கொஞ்சமாக விசயம் தெரிந்திருந்தது.
Saturday, November 30, 2019
வினோத உடையுடுத்தும் தையல்காரன் மகன். - அத் 3
சுடுகாட்டுக்கு நடுராத்திரியில் போய் அர்த்த சாம பூசைகள் செய்து பேய், பிசாசு, குரளி, ரத்தக்காட்டேறி, போன்றவற்றை தன் கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தி பிறகு பில்லி, சூன்யம், ஏவல், செய்வினை போன்றவற்றை தீத்துவிடுவதால் சூராதி சூரன் என்று பெயர் எடுத்த தாத்தாவுக்கு பேரனாகப் பிறந்தவன் சாம்பமூர்த்தி. அவன் இப்பொழுது அப்படி எதுவும் வினோத பூசைகளை தொப்பூர் சுடுகாட்டுக்குப் போய் செய்வதில்லை. காரணம் சுடுகாட்டு பயம் ஊர் மக்களுக்கு சுத்தமாக இல்லாமல் போய், இப்பொழுது சுடுகாட்டுக்கு நடுவிலேயே நான்கைந்து வீடுகள் கட்டி குடும்பமாக குடியிருக்க ஆரம்பித்து விட்டார்கள். நள்ளிரவில் பிணங்கள் எரிவதை சிறுநீர் கழிக்க வரும் சிறுபையன்களும் தகிறியமாகப் பார்த்துவிட்டு கெட்ட கனவுகள் இல்லாமல் சுடுகாட்டுக்கு நடுவீட்டில் தூங்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். சுடுகாட்டில் கொல்லிவாய்ப் பேய், குட்டை முனி போன்றவை இருக்காது என்று ஊர் ஜனங்களுக்கு அத்துப்படியாக தெரிந்துவிட்டது. அதுவும் இல்லாமல் இப்பொழுது செல்போனும், கம்ப்யூட்டரும் வைத்திருக்கும் ஒரு நவீன யந்திர மந்திர தந்திர நிபுணனாக இருக்கும் பிரபலஸ்தன் போயும் போயும் சுடுகாட்டு தலைச்சான் பிள்ளையின் கபாலத்து மை எடுத்து வெற்றிலையில் தடவி வித்தைக்காட்டி காசு சம்பாதிப்பதை அவமானம் என்றும் நினைத்தான்.
வினோத உடையுடுத்தும் தையல்காரன் மகன். - அத் 2
நெலிகம் கிராமம் தோன்றி எத்தனை வருசங்கள் ஆயிற்று, அங்கு மனிதர்கள் துணி உடுத்துவதை எப்பொழுதிலிருந்து ஆரம்பித்தார்கள், உடல் மறைக்கும் நாகரீகம் தோன்றி எத்தனை வருசம் ஆயிற்று என்பது, மின்சாரம் வந்த நாள் அறியப்படாதது போலவே அறியப்படாத சங்கதியாக ஊரில் இருந்தது. அதே சமயம் நெலிகத்தில் இப்பொழுது உயிரோடிருப்பவர்களின் நினைவுக்கு குழப்பமற்று தெளிவாகத் தெரிந்த வரையில், காலாதி காலமாக ஊருக்குள் யாரும் உடையில்லாமல் நடமாடியதாக பேச்சு வழக்கில்கூட கதைகள் கிடையாது. இரவின் கண் தெரியாத வீட்டுச் சுவற்றுக்குள்ளும், தென்னை ஓலையின் துவாரம் மிகுந்த குளியல் தடுக்குக்குள்ளும், நடக்க முடியாத நோயாளியின் படுக்கை மீதும் மட்டுமே நிர்வாணமாக சில மனுஷ மனுஷிகள் நெலிகத்தில் இருந்தார்களேயன்றி குமரனைப் போல பலபேர் முன்னிலையில் பட்டப் பகலில் நிர்வாணமாக யாரும் அலறியபடி அத்தனை வேகமாக ஓடியதே கிடையாது. அந்தக் காட்சியை இன்றைக்குத்தான் நெலிகம் மண் கண்டிருக்கிறது.
வினோத உடையுடுத்தும் தையல்காரன் மகன். - அத் 1
தகடூர்க்காரன் அதியமானோடும் அவன் ஒரு மூதாட்டிக்கு கொடுத்த சாகாப்
பழம் நெல்லியோடும் தொடர்புடையது போலத் தோற்றம் கொண்ட பெயரை உடைய அந்த ஊருக்கு
மின்சாரம் வெள்ளைக்காரன் நாட்டை விட்டு ஓட்டம் எடுப்பதற்கு முன்பே வந்ததாக பாவடித்
தெரு டீக்கடை பெஞ்சில் உட்கார்ந்து கிழவர்கள் வெகுகாலம் பேசியபடி இருந்தார்கள். என்றாலும்
திட்டவட்டமாய் மின்சாரம் வந்த அந்த நாள் யாருக்கும் தெரியாமல் இருந்தது. அது
தெரிந்து ஆகப்போவதென்ன என்று அசட்டு சோம்பேறித்தனம் அனேகருக்கு இருந்ததால் அந்த
முக்கிய நாள் நெலிகத்து சரித்திரத்தில் காணாமலே போயிருந்தது. அதுவுமில்லாமல்
மின்சாரம் வந்த நாளை பிரயத்தனப்பட்டு அறிந்து அந்த சரித்திரத்தை பெருமாள் கோயிலின்
சிதைந்த கல்சுவற்றின் கல்வெட்டாய் வெட்டும் ஆர்வத்தில் யாரும் அந்த ஊரில்
கிடையாது.
வைத்தியனின் கடைசி எருமை
ஆங்கார ரூபத்துடன் ஓங்காரமாய் விழி உருட்டி ஓங்காளியம்மன் ஒரு சின்ன
கண்ணாடிச் சட்டத்திற்குள் அழகாய் நின்றாள். அந்த ஓங்காளியம்மன் முன் மண்டியிட்டு
வேண்டிய கறுத்த நிறத்துக்காரனின் பெயர் ஓங்காளியப்பன். அவனுடைய பாட்டி பெயரும் ஓங்காளியம்மா
தான். குலதெய்வத்தின் பெயரை வழிவழியாய் வைத்துக்கொண்டு பரம்பரையின் கொடித் தடமாய்
வேரோடிய ஓங்காளியப்பனுக்கு ஓங்காளியம்மாவின் மேல் (பாட்டி ஓங்காளியம்மா இல்லை,
சாமி ஓங்காளியம்மா) அப்படி ஒரு நம்பிக்கை!
கூர்மையான பற்கள். - ஆபத்தும் பராமரிப்பும்.
முன்பே சொல்லிவிடுகிறேன். இது நிச்சயமாக பற்கள் பற்றிய
மருத்துவக் குறிப்பு அல்ல. என்னிடம் கொஞ்சம் உப்பு மற்றும் கோபால் பல்பொடி மட்டுமே
இருக்கிறது. பற்களை பராமரிக்க அவை போதுமானதல்ல.
கூர்மையான
பற்களால் அவதிப்படுகிறவர்கள் நல்லதொரு பல் மருத்துவரை அனுகுவதே நல்லது.
பற்களோடு
தொடர்பில்லை என்றால் இந்தத் தலைப்பு எதற்காக?
Saturday, November 2, 2019
வியாழன் மறுவீடு புகுதல் – சில பரிகார விளக்கங்கள்.
வெளியே
காக்-காவென்று ஒரே சத்தம். இன்னும் பொழுது விடியவில்லை. ஜன்னல் வழியாகத் தெரிந்த வானம் ஒரே புகைமூட்டமாக
இருக்கிறது. அந்தக்காலத்தில் ஒரு பழக்கம் உண்டு. தூங்கி எழுந்ததும் முதல் காரியமாக
தன்முகத்தைத் தானே பார்த்துக்கொள்வார்கள். சிறிய கண்ணாடியில்.. அன்றைய நாளை இனிய நாளாகத்
துவங்குகிறார்களாம். தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம் போல இதுவும் தொட்டுத் தொடரும்
பாரம்பரியமானதொரு மூட நம்பிக்கைதான். கண்ணாடியில் தெரிவது கடவுள் இல்லை. அது ஒரு மனித
முகம். தூங்கி வழிகிற அசட்டு முகம். அதில் நல்லதும் கெட்டதும் எழுதப்பட்டிருக்காது.
வாயைப் பிளந்துகொண்டு எச்சில் வழிய தூங்கும் சிலருக்கு கடைவாய் ஓரத்தில் யானைத் தந்தம்
அளவுக்கு வெள்ளைக் கோடுகள் வேண்டுமானால் முளைத்திருக்கலாம். அந்த முகத்தில் வேறு எந்த
அதிசயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் முகத்தைப் பார்த்துக்கொள்வார்கள்.
Thursday, October 31, 2019
# மழைக்காலத்தில் முளைக்கும் குடைக்காளான் #
·
நல்லிரவு நேரம். மழை தொரத்தொரவென பெய்துவிட்டு சற்றுமுன்தான் ஓய்ந்திருக்கிறது. இப்போதே குளிர்காலம் வருவதன் ஆயத்தம் தெரிகிறது. ஈரம்சாரமான இந்த இரவில் அமானுஷ்யங்கள் குறித்து எழுதலாமா என்று யோசிக்கிறேன்.
·
பேய்க் கதைகளா? நல்லிரவிலா?
Sunday, October 27, 2019
# நல்ல கவிதைகளை எப்படி அணுக வேண்டும்? #
பலபேர் ஊரவைத்து துவைத்துக் காயப்போட்ட துணிகளை மீண்டும் துவைத்துக் கிழிப்பதில் உடன்பாடில்லைதான். நான்கு வரிக் கவிதைகளை படித்துவிட்டு, சுமாராக புன்னகைத்து, அடுத்த பக்கத்திற்கு தவ்வுகிற போது மீண்டும் மீண்டும் அதே கவிஞர் அதே கவிதைகளை அதே பெயரில் எழுதி இன்புறுத்தியதால் சில வார்த்தைகள் மட்டும் சொல்லத் தோன்றியது..
Wednesday, October 16, 2019
மிட்நைட் உயிரினங்கள்
மின்சாரம் மனிதர்களோட சில அடிப்படை
குணங்களை மொத்தமா மாத்தியிருக்கு. ராத்திரி பனிரெண்டு மணிக்கு குளிச்சிட்டு
சுடச் சுட ரவா உப்புமா சாப்பிடறவங்களப் பத்தி கேள்விப்பட்டிருக்கேன். அவங்களோட உயிரியல் கடிகாரம் சந்தேகமே இல்லாம ஸ்தம்பிச்சி நின்னுபோயிருக்கும்.
பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் தெரியாது. அஸ்த்தமனத்திற்கு
பிறகு தீவிரமா செயல்படுவாங்க. ராத்திரி ஆனா அவங்களோட உலகம் பரபரப்பாயிடும். வீட்டுல
இருக்கிற மொத்த விளக்கையும் போட்டு இரவ பகலாக்கி அப்போதான் பொழுது விடிஞ்ச மாதிரி சுறுசுறுப்பா
செயல்பட ஆரம்பிப்பாங்க. சந்தேகமே இல்லாம அவர்கள் மிட்நைட் உயிரினமா மாறிட்டாங்க. அப்படின்னா
பகல்ல என்ன பண்ணுவாங்க? பகல்ல செயல்படவேண்டியவங்க இரவு நேரத்த
தேர்ந்தெடுக்க காரணமென்ன? இது வரமா? நோயா?
Tuesday, October 15, 2019
கருங்கல் கோட்டை சிங்க பைரவன் - பகடிச் சரிதம்
- “கருங்கல் கோட்டை சிங்கபைரவன் கதை“ என்கிற எனது சரித்திர நகைச்சுவைப் புதினம் எனப்படுகிற பகடிச் சரிதம் இப்போது யார் யாரிடம் அபத்திரமான நிலையில் இருக்கிறது, எத்தனை பேர் வாசித்திருப்பார்கள், யாரெல்லாம் எதிர்காலத்தில் வாசிக்கக் காத்திருக்கிறார்கள் என்கிற தரவுகள் இல்லை.
- யதேச்சையாக அதைப் பற்றி ஒருவர் குறிப்பிட்டு சிலாகித்து பேசியதால் மீண்டும் தூசு தட்டி மீண்டும் வாசித்து சிரித்துக்கொண்டேன்.
- சரித்திரப் பகடிகள் எப்போதுமே சாகாவரம் பெற்றவை. அதைமின்புத்தகமாக கொண்டுவர உத்தேசம். எதற்கும்அதன் வாசகச் சுவை அறிந்துகொள்ள மாதிரிக்கு மூன்றாம் அதியாயத்தை படித்துவிடுங்கள்.
Monday, October 7, 2019
சொல்லிசைப் பிரதிகள் - இதெல்லாம் ஒட்டகமா?
இது நியாயமில்லைதான். வாசிப்பவர்களின் நேரத்தோடும், ரசனையோடும் விளையாடக் கூடாதுதான். மனதில் தோன்றுவதையெல்லாம் எழுதிவிட்டு, “இனி இது படிப்பவன் பாடு” என்று வீட்டுக் குப்பையை வீதியில் இறைக்கிற மனோபாவம் தவறான ஒன்றுதான். அந்தத் தவறு தொடர்ந்து உலகமெங்கும் நடந்தபடிதான் இருக்கிறது.. பாவம் வாசக நெஞ்சங்கள்.
Friday, October 4, 2019
கொசு விரட்டி 2
நா போக்கிரி பொம்பள
போகாத ஊருக்கு
தடம் காட்டும் வெறும் பயலே
யாரடா நீ
தலையற்ற முண்டமே
ஊசிப்போன பண்டமே
கொசு விரட்டி
தண்டமுத்து
மிடுக்காக
உடுத்துவான்
அழகாய்ப்
பேசுவான்
நாகரீகம்
எதுவென்று
நயம்பட
உரைப்பான்
இன்முகம்
காட்டுவான்
Sunday, July 28, 2019
Thursday, July 18, 2019
மீண்டும் “ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு“
“ரதிப்பெண்கள் திரியும் அங்காடித்தெரு“ புதுப்பொழிவோடு,
ரசனையான அட்டைப்படத்தோடு மறுபதிப்பாக வந்திருக்கிறது. பிரதி கிடைக்குமா என்று நேரிலும்,
தொலைபேசியிலும் விசாரித்த அன்பு உள்ளங்கள் சந்தியா பதிப்பகத்தாரை தொடர்புகொண்டு புத்தகத்தைப் பெறலாம்.
அந்தரத்தில் நடப்பதும் வளையத்திற்குள் நுழைவதும் பார்க்கும் கண்கள் நூறு உண்டு என்ற
நம்பிக்கையில்தான். கலைக்கும் கலைஞனுக்கும் கை தட்டலே உந்துவிசை.
Saturday, July 6, 2019
பவுர்ணமி யுத்தம் -மின்புத்தகம்
ஞாபக அடுக்கில் தங்கிவிட்ட சில மனிதர்களின்
சிறு குறிப்பை, அவர்களை அசைத்துப்பார்த்த சில சம்பவங்களின் தெறிப்பை
கதைகளாக எழுதியிருக்கிறேன். பத்து மனிதர்கள். பத்துக் கதைகள்.
மகிழ்ச்சியோ, குமுறலோ.. அது பட்டவன் பாடு. அதை
திரும்பத் திரும்ப எழுதி, அதைப் படித்து, எவன் பாடுகளையோ தன் பாடுகளாய் பாவித்து உணர்ச்சிவசப்பட்டு..., இதல்லாம் எதற்காக? முகம் தெரியாத மனுசர்களின் கதைகளை அறியும் ஆர்வம் எங்கிருந்து கிளைக்கிறது?
Friday, July 5, 2019
முதல் புத்தகம் - எனது ஞாபகங்களை முறுக்குப் பிழிகிறேன்.
2004
நவம்பரில் எனது முதல் புத்தகம்
வெளியாகிறது. புத்தகங்களை கூரியரில் அனுப்பிவிட்டார்கள். புராணக் கதையாடல்களில்
ஒரு காட்சி வரும்... மோகினி அமிர்தம் தருகிறாள். அசுரன் வாங்கிக்கொள்கிறான்.
அவன் கரங்கள் நடுங்குகின்றனவா? கூரியர்பாய் நடுக்கத்தை
கவனித்துவிட்டார். “தலைசிறந்த நாட்டியக்காரி எப்போதும் ஆடுவாள்.
புத்தகங்கள் ஆடுமா?“ அவையின் சந்தேகங்கள் இவை.
அவை ஆட்டுவித்து ஆடவில்லை. உண்மையில் புத்தகங்கள்
துடிக்கின்றன. அவற்றுக்கு உயிர் இருக்கிறது.
புத்தகத்தின் அட்டைப் படமும்,
தலைப்பும் விவரிக்க முடியாத உணர்வைத் தருகிறது. 'இன்றுமுதல் நீ எழுத்தாளன் என்று அழைக்கப்படுவாய்' என்ற
குரல் எல்லாம் கேட்கவில்லை. 'மெய்யெல்லாம் சிலிர்த்து ஆனந்தக்
கண்ணீர் உகுத்து அந்தரத்தில் மிதந்தேனே... என்ன தவம் செய்தேனோ
யான்' என்றெல்லாம் அதீதமாகச் சொல்லி இலக்கியப் பிரவேசத்தை மிகைப்படுத்த
விரும்பவில்லை. பிரபல பத்திரிக்கையில் மூன்று வரிக் கவிதையும்,
அதன் கீழடிப் பெயரும் முதன் முதலில் பிரசுரம் ஆகிறபோது, எழுத்தை, அச்சுவடிவத்தில் பார்க்கிறபோது உண்டாகிற மன
மகிழ்ச்சியை அனுபவித்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.
Monday, May 27, 2019
பிறகு நான் சிறகானேன்
நான் ஒரு வழிப்போக்கன்.
பூமிக்கு
அனுப்பி வைத்தார்கள்.
எனக்கு முன்பே வந்தவர்கள்
எனக்கு ஒரு பெயர் இட்டார்கள்.
செய்ய வேண்டிய
கடமைகள் என்று
சிலவற்றை போதித்தார்கள்.
அதில் குற்றமும் இருந்தது,
அன்பும் இருந்தது.
பூமிக்கு
அனுப்பி வைத்தார்கள்.
எனக்கு முன்பே வந்தவர்கள்
எனக்கு ஒரு பெயர் இட்டார்கள்.
செய்ய வேண்டிய
கடமைகள் என்று
சிலவற்றை போதித்தார்கள்.
அதில் குற்றமும் இருந்தது,
அன்பும் இருந்தது.
Saturday, May 25, 2019
ஒற்றை மிகுதியானவன்
இந்த வாழ்க்கை மீது எனக்குள்ள விமர்சனங்களை என் கதைகளில் எழுதுகிறேன். என்னைச் சுற்றி இருக்கிற நிஜ மனிதர்களும், எனது உள்ளத்தில் உருவாக்கிய கற்பனை மனிதர்களும் சந்திக்கும் புள்ளியே எனது கதையின் பேசும் பொருள்.
Thursday, May 16, 2019
ஒரு சொல் - வெற்றியை கொண்டாடாதீர்கள்
எல்லோருமே வெற்றியை விரும்புகிறார்கள். வெற்றியை
கொண்டாடுகிறார்கள். எல்லாவற்றிலும் எப்பொழுதும் வெற்றி பெறவே விரும்புகிறார்கள். ஆனால், வெற்றி என்பது எதிராளி மீது தோடுக்கப் படுகிற மோசமான வன்முறை. சமூகத்தின் அங்கமாக இருக்கும் ஒருவன், தான் மட்டும்
வெற்றிகரமான மனிதனாக இருக்க வேண்டும் என்று நினைப்பது மனநோய். உங்களுக்கு நெப்போலியனை பிடிக்குமா? ஹிட்லரை கொண்டாடுகிறீர்களா? Sunday, May 5, 2019
வறட்சியும் பிளாக் கரண்ட் ஐஸ்கிரீம் விலையும்.. இந்திய தேசமும்
Friday, May 3, 2019
தாமிரநங்கையின் யாழும் சில தும்பிகளும் - மின்புத்தகம்
மின்புத்தகம் போடுவதில் சில சடங்குகள் இருக்கிறது. அதில் ஒன்று “உன் புத்கத்தைப் பற்றி நீயே சொல்..”
இதில் நான் என்ன சொல்லுவது?
அசரவைக்கும் அதிரடிச் சிறுகதைகள்.. நெஞ்சத்தை உலுக்கும் உண்மைச் சம்பவங்கள்.. உட்கார்ந்திருப்போரை ஓட வைக்கும், ஓடுவோரை பறக்க வைக்கும். மருந்தில்லை.. பத்தியமில்லை. இதை மட்டும் படித்தால் போதும். ஆடியில் அடைமழை. கோடையில் குளுகுளு.... வாங்கிவிட்டீர்களா ஆ ஆ ஆ?
இது என்ன கதையா, மந்திரக்கோலா? ஒரு சாதாரண கதை, வாழ்வைப் புரட்டிப் போடுமா?
இதில் நான் என்ன சொல்லுவது?
அசரவைக்கும் அதிரடிச் சிறுகதைகள்.. நெஞ்சத்தை உலுக்கும் உண்மைச் சம்பவங்கள்.. உட்கார்ந்திருப்போரை ஓட வைக்கும், ஓடுவோரை பறக்க வைக்கும். மருந்தில்லை.. பத்தியமில்லை. இதை மட்டும் படித்தால் போதும். ஆடியில் அடைமழை. கோடையில் குளுகுளு.... வாங்கிவிட்டீர்களா ஆ ஆ ஆ?
இது என்ன கதையா, மந்திரக்கோலா? ஒரு சாதாரண கதை, வாழ்வைப் புரட்டிப் போடுமா?
Thursday, May 2, 2019
வயல் பூதம் - மின்புத்தகம்
இந்த அவசர யுகத்திலும், எல்லைக்குள் அடங்காத என் சாய்சதுரக் கதைகளை ஊன்றிப் படித்து, நுணுகி ரசித்து பாராட்டுகிற பரந்துபட்ட கதா பிரியர்களுக்கு நான் தலை வணங்கியே ஆகவேண்டும். கதையின் மையம் விலகிச் சென்று வாழ்வின் வேறு கூறுகளை மின்னல் வெட்டிச் செல்கிற அத்துமீறல்களைத் தான் அவர்கள் வியப்பதும், சுட்டிக்காட்டுவதும். சிற்பத்தின் நகக் கண்களையும் நுட்பத்தோடு ஒரு சிற்பி ஏன் செதுக்குகிறான் என்பதற்கு, வந்தடைகிற பாராட்டுகளே காரணம்.
பெற்றவர்களுக்கும், மனைவிக்கும், குழந்தைகளுக்கும், கதைகளுக்கும் கூடுதலான நேரத்தை ஒதுக்கினால் வாரத்தின் ஏழாம் நாளை நாய் தின்றுவிடும் என்ற அச்சத்தை நம்பாதவன் நான். நேரம் ஒதுக்கினால் கதைகளும், உறவுகளும் சுவாரஸ்யமான ஜீவன்கள் என்பது புரிபடும்.
இன்னொரு முக்கிய விவகாரம்... மொழியின் பரிசுத்தத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கானது. மொழியின் இலக்கணம் என்பது அத்து மீறி பக்கத்து வீட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதில் நம்பிக்கையுள்ளவன்தான் நான். ஆனாலும் சில அத்தியாவசியமான கணங்களில் மொழி தன்னளவில் வரம்பு மீறுவதையும் தவிர்க்க ஏலாது. 'ஆயிரம் இலைகளுக்கும் ஒரே கிளை' என்பதுதான் இலக்கண வரம்பிற்கு உட்பட்டது என்றாலும், அக் கதை சொல்ல விழைகிற ஆதாரமான விஷயம் பிரபஞ்ச ஓர்மை; உயிர்களுக்கு நடுவில் ஒரு ஜீவ ஓர்மை. அதனால்தான் பன்மையில் இல்லாமல் 'ஆயிரம் இலைக்கும் ஒரே கிளை' என்று ஓர்மையில் தலைப்பிட்டேன்.
“ஒருமையின் பன்மையும் பன்மையின் ஒருமையும்
ஓரிடம் பிறஇடந் தழுவலும் உளவே!" என்றும்,
'ஏற்ற பொருளுக் கியையு மொழிகளை
மாற்றிஓர் அடியுள் வழங்கல்மொழி மாற்றே!"
என்றும் சொல்லப்பட்ட நன்னூல் இலக்கணத்தை நான் இங்கே மேற்கோள் காட்டுவது என் தப்பிலக்கணத்திற்கு முட்டுக் கொடுப்பதற்காக அல்ல! வாழ்வின் இக்கட்டிற்காக இலக்கணங்கள் சிலபோது மீறப்படலாம் என்பதையும் சுட்டுவதற்கே. இலக்கண வரம்பிற்கு உட்படாத இக் கதா தலைப்பை உச்சரிக்கும்போது அதில் ஓசையின்பத்தையும், ஒற்றைப் புள்ளிக்குள் இப் பிரபஞ்சம் குவிந்து நிற்கிற உணர்வின் இன்பத்தையும் நான் உணர்ந்தேன். தலைப்பின் கதையை படித்தால் நீங்களும் அதை உணர்வதற்கு சாத்தியமுண்டு. உணர்ந்து பாருங்கள்.
..
பெற்றவர்களுக்கும், மனைவிக்கும், குழந்தைகளுக்கும், கதைகளுக்கும் கூடுதலான நேரத்தை ஒதுக்கினால் வாரத்தின் ஏழாம் நாளை நாய் தின்றுவிடும் என்ற அச்சத்தை நம்பாதவன் நான். நேரம் ஒதுக்கினால் கதைகளும், உறவுகளும் சுவாரஸ்யமான ஜீவன்கள் என்பது புரிபடும்.
இன்னொரு முக்கிய விவகாரம்... மொழியின் பரிசுத்தத்தில் நம்பிக்கை கொண்டவர்களுக்கானது. மொழியின் இலக்கணம் என்பது அத்து மீறி பக்கத்து வீட்டிற்குள் நுழைந்துவிடக் கூடாது என்பதில் நம்பிக்கையுள்ளவன்தான் நான். ஆனாலும் சில அத்தியாவசியமான கணங்களில் மொழி தன்னளவில் வரம்பு மீறுவதையும் தவிர்க்க ஏலாது. 'ஆயிரம் இலைகளுக்கும் ஒரே கிளை' என்பதுதான் இலக்கண வரம்பிற்கு உட்பட்டது என்றாலும், அக் கதை சொல்ல விழைகிற ஆதாரமான விஷயம் பிரபஞ்ச ஓர்மை; உயிர்களுக்கு நடுவில் ஒரு ஜீவ ஓர்மை. அதனால்தான் பன்மையில் இல்லாமல் 'ஆயிரம் இலைக்கும் ஒரே கிளை' என்று ஓர்மையில் தலைப்பிட்டேன்.
“ஒருமையின் பன்மையும் பன்மையின் ஒருமையும்
ஓரிடம் பிறஇடந் தழுவலும் உளவே!" என்றும்,
'ஏற்ற பொருளுக் கியையு மொழிகளை
மாற்றிஓர் அடியுள் வழங்கல்மொழி மாற்றே!"
என்றும் சொல்லப்பட்ட நன்னூல் இலக்கணத்தை நான் இங்கே மேற்கோள் காட்டுவது என் தப்பிலக்கணத்திற்கு முட்டுக் கொடுப்பதற்காக அல்ல! வாழ்வின் இக்கட்டிற்காக இலக்கணங்கள் சிலபோது மீறப்படலாம் என்பதையும் சுட்டுவதற்கே. இலக்கண வரம்பிற்கு உட்படாத இக் கதா தலைப்பை உச்சரிக்கும்போது அதில் ஓசையின்பத்தையும், ஒற்றைப் புள்ளிக்குள் இப் பிரபஞ்சம் குவிந்து நிற்கிற உணர்வின் இன்பத்தையும் நான் உணர்ந்தேன். தலைப்பின் கதையை படித்தால் நீங்களும் அதை உணர்வதற்கு சாத்தியமுண்டு. உணர்ந்து பாருங்கள்.
..
அன்புடன்
எழில்வரதன்.
எழில்வரதன்.
Wednesday, April 24, 2019
கொம்புள்ள குதிரை - மின்புத்தகம்
கண்ணுக்கு மை தீட்டும் கதைகள்
நவீனகாலத்தில் பொழுதுபோக்க எத்தனையோ
வந்துவிட்டது.. கையடக்கப் போன்களில் பார்க்கவும், கேட்கவும்,
ஓயாமல் பேசவும், எழுதவும், எண்ணங்களை பகிர்ந்து கொள்ளவும், கதையளக்கவும்,
கதறவைக்கவும் சாத்தியமாகிறது. ஒரு புகைப்படம்,
சில நொடிக் காணொளிக் காட்சி உலகின் குதூகலத்தை, அடர்த்தியான துக்கத்தை சொடக்கும் நேரத்தில் இண்டு இடுக்குவிடாமல் கொண்டு
சேர்த்து உணர்ச்சி வசப்படவைக்கப் போதுமானது.. இன்னமும் நான்
ஏன் சிறுகதைகளை வாசிக்க வேண்டும்..?
ஆலமர இடையழகு - மின்புத்தகம்
இது
ஒரு புதிய முயற்சி. புதிய வரவு. “ஆலமர இடையழகு“ 2007-ல் முதல்பதிப்பு கண்டு, தமிழக
அரசின் விருதையும் பரவலான வாசகர் கவனத்தையும் பெற்றுத் தந்தது. அதிலிருக்கும் பனிரெண்டு
கதைகளை இரு தொகுதிகளாக்கி, (கொம்புள்ள குதிரை அடுத்து வரவிருக்கிறது) மின்புத்தகமாக
கொண்டு வந்தாயிற்று.
அமேஸான் கிண்டிலில் புத்தகம் போடுவது என்பது சட்டை
பேண்ட் போடுவது போல எளிமையானது. பரிட்சைக்கு படிப்பது போல வழிமுறைகளை தேடிப் பிடித்துப்
படித்து, யூடியூப்பில் வீடியோ பார்த்து, ஆங்கிலத்திலும் தமிழிலும் அள்ளித் தெளிக்கிற
அறிமுகமற்ற நண்பர்களின் அறிவுரைகள் வழிமுறைகளை உள்வாங்கி, தனியாக ஒரு கணக்கு வழக்கு
வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கி, அட்டை வடிவமைத்து, அதற்கு தனி விடியோக்கள் பார்த்து,
நடுநடுவே, இந்த ஆணியை பிடுங்க வேண்டுமா என்று ஆயாசமடைந்து, திட்டத்தை ஒத்திப்போட்டு,
மிண்டும் தூசு தட்டி எடுத்து, விற்கிற மா தித்தனின் விடா முயற்சியோடு புத்தகமாகப் போட்டு
முடிப்பதற்குள்,
Sunday, February 17, 2019
பாதாள நந்தி - சிறுகதை

தன் மூப்பால் எழுபத்தியிரண்டு பெண்களுக்கு உடல் பார்த்து சமயும் நாள் சொன்ன அவள் பாட்டியைப் போல புஷ்பா அனுபவப் பட்டவள் இல்லை என்றாலும் ஒருத்திக்கு கனவில்; ஆண் பிள்ளையின் சாயலொத்த நிமித்தங்கள் வந்தால் மறுநாளே சமைந்து நிற்பாள் என்று கனவில் நினைவோடிற்று அவளுக்கு. ஆண் பிள்ளை கனவில் வருவது கள்ளத்தின் அடையாளமென்று அவள் அம்மா சொல்வதும் அவளுக்கு உறைக்காமல் இல்லை.
Subscribe to:
Posts (Atom)